நீங்க எல்லாரும் வரலாம்…! ஓபிஎஸ் ‘செம’ அறிவிப்பு
சென்னை: பல்வேறு காரணங்களினால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என்று ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: அஇஅதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுக்கோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சிச் செயலாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தொகுதிக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.