எடப்பாடியை கடிச்ச பூச்சி…! வீட்டில் இருந்தபடியே அடுத்த திட்டம்..!
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.
அதில் அதிமுகவின் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கோர்ட் தீர்ப்பால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சில நாட்களாக தொடர் பயணத்தில் இருந்ததாகவும், பயணம் செய்யும் போது பூச்சி கடித்து அலர்ஜியும் ஏற்பட்டு உள்ளது.
கோர்ட் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் மருத்துவமனை சென்றால் அது தேவையில்லாத சலசலப்புகளை ஏற்படுத்தும் என்பதால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.