வாக்கு எண்ணிக்கையில் திருப்பம்…! ஓபிஎஸ் தொகுதியில் சர்ப்ரைஸ் நிலவரம்…!
சென்னை: போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கின. தொடக்கத்தில் தபால் வாக்குகளும், அதன் பின் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முக்கிய தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த பல வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் பின்னடைவு சந்தித்து உள்ளார். திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 6,538 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் 6,414 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை விட தங்க தமிழ்செல்வன் 124 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.