Sunday, May 04 12:57 pm

Breaking News

Trending News :

no image

உதகை ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…! இதோ முழு விவரம்


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பணியிடத்தின் பெயர் ஜியோ டெக்னிக்கல் எக்ஸ்பர்ட்(geo technical expert), ஜியோலாஜிக்கல் எக்ஸ்பர்ட் மற்றும் வாட்டர் ஷெட் மேனேஜ்மென்ட் எக்ஸ்பர்ட் (geological expert and watershed management expert).

இந்த வேலைக்கு சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம், எம்டெக், எம்எஸ், எம்இ படிப்பு முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

இவர்கள் தவிர, geological expert பணிக்கு geology/ applied geology preferably with specialization in geological mapping for landslide studies/geotechnical investigation for slope stability analysis/disaster management ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் அப்ளை பண்ணலாம்.

மேலும் watershed management expert பணிக்கு engineering (soil and water conservation/water resource/hydrology/ civil engineering with specialization in watershed or other watershed related subjects) முடித்த முதுகலை பட்டம் பெற்றவர்களும் அப்ளை பண்ணலாம்.

18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 10ம் தேதியாகும். மொத்தம் 3 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு மாத ஊதியம் ரூ.75000 ஆயிரமாகும்.

மேலும் முழு விவரங்கள் வேண்டுவோர் கீழ்க்கண்ட இணைப்புகளை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2021/06/2021061733.pdf

https://nilgiris.nic.in/notice_category/recruitment/

Most Popular