அடிச்சு ஊத்தும் மழை…! இன்று எந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா..?
உதகை: விடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையின் காரணமாக உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
ஆனாலும் பருவமழை வெளுத்து வாங்கி வருவதால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை ஆட்சியர் அம்ரித் வெளியிட்டு உள்ளார்.
உதகையை போன்று வால்பாறையிலும் கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி வால்பாறை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.