Sunday, May 04 12:01 pm

Breaking News

Trending News :

no image

ஜிஎஸ்எல்வி எப் - 10 ராக்கெட் திடீர் தோல்வி..! இஸ்ரோ ஷாக்


ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி எப் - 10 ராக்கெட் தோல்வி அடைந்துவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புவியின் தட்ப வெப்பநிலை கண்காணிக்க ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் இன்று ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று அதிகாலை விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

அதில் நவீன செயற்கைகோள் இருந்துள்ளது. அதன் மூலம் நாட்டின் தட்ப வெப்பநிலை நிலவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். ஆனால் விண்ணுக்கு பாய்ந்த சில நிமிடங்களில் அதன் பாதையை விஞ்ஞானிகள் கணித்தனர். ஆனால் இந்த ராக்கெட்டை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறால் ராக்கெட்டை நிலைநிறுத்த முடியவில்லை. ஆகையால் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை, தோல்வி அடைந்துவிட்டது என்று இஸ்ரோ சிவன் அறிவித்து உள்ளார்.

இந்தியா கிட்டத்தட்ட 14 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது. 2006ல் ஒருமுறை, 2010ம் ஆண்டு இரு முறை தோல்வி கண்டிருக்கிறது. அதன் பிறகு இப்போது 4வது முறையாக தோல்வியை இந்தியா சந்தித்து இருக்கிறது.

எந்த இடத்தில், என்னவித மாதிரியான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய உள்ளதாக இஸ்ரோ கூறி உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நாட்டு மக்களுக்கு ஜிஎஸ்எல்வி எப் - 10 ராக்கெட் தோல்வி அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது, நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் கொண்டு போய் விட்டுள்ளது.

Most Popular