மக்களை அச்சுறுத்தும் நிவர்…! பெட்ரோல், டீசல் பங்குகள் மூடல்…!
சென்னை: நிவர் புயல் காரணமாக, 7 மாவட்டங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி வலு பெற்று இருக்கிறது. இந்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி உள்ளது.
இன்று அதி தீவிரப் புயலாக உருவெடுத்து, மாமல்லபுரம், காரைக்காலுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுத்தப்பட்டு உள்ளன.
அரசு அலுவலகங்களக்கு தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதே சமயத்தில் வழக்கம் போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர் , செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில், நிவர் கரையை கடக்கும் தருணத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.