வங்கி கணக்கில் இருந்து ரூ.330 பிடித்தம்..! குழம்பி தவிக்கும் வாடிக்கையாளர்கள்
டெல்லி: வங்கி கணக்கில் இருந்து 330 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வருவது வாடிக்கையாளர்களை திடீர் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
அண்மைக்காலமாக பெரும்பான்மையானவர்கள் வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு மெசேஜ் சென்று கொண்டிருக்கிறது. அந்த மெசேஜை படித்தால் 330 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஆனால் எதற்காக இந்த படம் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை பலரும் மறந்தே போய்விட்டனர். இன்னும் பலருக்கோ எதற்காக இந்த படம் பிடிக்கப்பட்டது என்று குழம்பியதோடு, பீதியும் அடைந்தனர்.
இந்த பணம் மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துக்குதான் பிடிக்கப்பட்டு உள்ளது. என்ன காப்பீட்டு திட்டம் என்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்… 6 ஆண்டுகளுக்கு முன்பாக 2015ம் ஆண்டில் மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது.
அதாவது அந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பதாகும். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கடந்து போய்விட்டதால் அதை மக்கள் மறந்தே போய்… இப்போது பீதி அடைந்திருக்கின்றனர். ஒரு நபரின் அக்கவுண்ட்டில் இருந்து ஒரு முறைதான் பணம் பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
மாறாக.. 2 அல்லது 3 முறை பிடிக்கப்பட்டிருந்தால் தான் உடனே சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு உடனடியாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க வேண்டும். தற்போது பணம் பிடிக்கப்பட்டு இருப்பதால் 2 லட்சம் ரூபாய் காப்பீடு திட்டத்துக்கு தகுதியானவர்களாக இருக்கிறீர்கள். எனவே எந்த காரணம் கொண்டு பயப்பட வேண்டாம் என்று வங்கிகள் தெரிவித்து உள்ளன.