மேகாலயாவில் நள்ளிரவில் பீதியில் அலறிய மக்கள்…! வட மாநிலங்களில் தொடரும் சம்பவங்கள்
ஷில்லாங்: மேகலயாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
அம்மாநிலத்தின் மேற்கு காஷி பகுதியில் நள்ளிரவு 1.13 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மக்கள் கவலையிலும், பீதியிலும் ஆழ்ந்துள்ளனர்.