Sunday, May 04 12:22 pm

Breaking News

Trending News :

no image

அதிமுக, திமுக ஜெயிக்கும் தொகுதிகள் எத்தனை? பி.கே சொன்ன அதிரடி கணக்கு


டெல்லி: அதிமுகவுக்கு இம்முறை 50 தொகுதிகள் கிடைப்பதே பெரிய விஷயம் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 6ம் தேதி முடிந்துவிட்டாலும் மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. தீர்ப்பை எழுதிய மக்களும் அடுத்து என்ன நடக்கும் என்று அமைதியாய் அனைத்தையும் பார்த்து வருகின்றனர்.

இந் நிலையில் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு குறித்து திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:

என்னுடைய கணிப்புப்படி அதிமுகவுக்கு இம்முறை 50 சீட்டுகளுக்கு மேல் கிடைக்காது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்னர் எனக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி திமுகவுக்கு எதிரான ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் அதிமுக உள்பட மொத்தம் 50 தொகுதிகளுக்கு மேல் தாண்டாது.

மேற்கு வங்க மாநில தேர்தலில் பாஜக இம்முறை 100 தொகுதிகளை தாண்டாது. இந்த எண்ணிக்கையை பாஜக தாண்டிவிட்டால் நான் தேர்தல் உத்தி வகுப்பாளர் என்ற தொழிலையே விட்டுவிடுகிறேன். அந்த மாநிலத்தில் அரசியல் களம் வேறு மாதிரியாக உள்ளது, பாஜகவுக்கு எதிராக மமதா படு தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார் என்று கூறி உள்ளார்.

Most Popular