Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

இன்றைய TOP 10 News…!


தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை  பார்க்கலாம்:

தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பரிசு தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

வேலைநிறுத்தம் நடைபெற்று வந்தாலும், தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருவதால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்து வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் வழக்கத்தை விட அதிக பனி  மற்றும் குளிர் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

திரிபுராவில் லாரியில் கடத்தப்பட்ட 1.63 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,630 கிலோ எடை கொண்ட போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேற்கு வங்க அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஓசூர் அருகே மளிகை கடைக்காரர் திம்மராஜ் என்பவர் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் நாகரத்தினா கணவருடன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

 599வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பூடான் நாடாளுமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றி மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

புரோ கபடி லீக் தொடரில் உத்தரப்பிரதேச போத்தாஸ் அணியுடன், தமிழ் தலைவாஸ் அணி அணி இன்று மோதுகிறது.

Most Popular