விடாத மழை… விட்டாச்சு ஸ்கூல் விடுமுறை…! இதோ முழு விவரம்
சென்னை; தொடரும் கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஒட்டு மொத்தமாக முடங்கி உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் முழு வீச்சில் இறங்கி உள்ளனர்.
இந் நிலையில் தொடர் மழை காரணமாக இன்று 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம்;
தேனி (பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)
நெல்லை
கன்னியாகுமரி
தென்காசி
தூத்துக்குடி
புதுக்கோட்டை
நீலகிரி
விருதுநகர்
ஆகிய 7 மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையை ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அதே சமயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் எப்போதும் வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.