முழிச்சுக்கோ… இல்லாட்டி ஓடி போய்டு…! தமிழக அரசை எச்சரிக்கும் கமல்
சென்னை: தமிழக அரசே விழித்துக்கொள், அல்லது விலகிவிடு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
தமிழகம் முழுவதும் அதி தீவிரமாக பரவி உள்ள கொரோனாவை தடுக்க முன் எச்சரிக்கை நடடிவக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது.
அதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். குடும்பங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
ஊரடங்கின் போது தளர்வுகள் அதிகரித்து வந்தாலும், இயல்பு வாழ்க்கை இன்னமும் திரும்ப வில்லை. இந் நிலையில், விலைவாசி உயர்வு, தொழில் முடக்கம், குற்றங்கள் தமிழகத்தில் வரப்போகும் பஞ்சத்திற்கான அறிகுறி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சமீபத்தில் நடத்தப்பட்டசிஆய்வுகள், தமிழகத்தில் வேலையிழப்பும், வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டது என குறிப்பிடுகின்றன. மேலும், விலைவாசி உயர்வு, தொழில் பாதிப்பு, அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் ஆகியன தமிழகத்தில் வரப்போகும் பஞ்சத்திற்கான அறிகுறி. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. தமிழக அரசே விழித்துக்கொள், அல்லது விலகிவிடு என்பனவாறு பதிவிட்டுள்ளார்.