பிரபல நடிகர் திடீர் மரணம்…! கலங்கி நின்ற திரையுலகம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரும், அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார். அவருக்கு வயது 75.
மலையாள திரையுலகில் 1972ம் ஆண்டு ரிலீசான நிருதாசாலா படம் மூலம் அறிமுகமானவர் இன்னசென்ட். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தமிழில் லேசா லேசா படத்தில் நடித்துள்ளார்.
சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்பியாகவும் அவர் இருந்துள்ளார். 2012ம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்ட வந்த இன்னசென்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசம் அடைந்த நிலையில் அவர் காலமானார்.
இன்னசென்ட் மறைவை அறிந்த நடிகர்கள் மம்முட்டி, திலீப் உள்ளிட்ட நடிகர்கள் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.