Sunday, May 04 12:51 pm

Breaking News

Trending News :

no image

எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்..! அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டர்


சென்னை: எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறேன்' பதிவிட்டுள்ளார்.

முன்னதாக எஸ்.பி.பி மகன், எஸ்.பி.பி.சரண் தனது அப்பா நலமுடன் உள்ளதாகவும், அவர் விரைவில் மீண்டு வருவார் என்று கூறி இருந்தார். 

Most Popular