#Vijayakanth கிரிக்கெட்டையும் கவர்ந்த ‘கேப்டன்’
தாம் நேசித்த மக்களை மட்டுமல்ல, கிரிக்கெட் உலகையும் கவர்ந்து இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். இதை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் வெளியாகி உள்ளது ஒரு பதிவு.
தமிழகத்தையே சோகமாக்கி இருக்கிறது விஜயகாந்தின் மறைவு. லட்சக்கணக்கானோர் கண்ணீர் செலுத்தி வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் ஒருவரும் ஆழ்ந்த இரங்கல் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் வாஷிங்டன் சுந்தர். தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் விஜயகாந்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டு அனைவரும் உங்களை மிஸ் செய்கிறோம், ஆத்மா சாந்தியடையட்டும் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு உள்ளார்.