தமிழகத்தில் இந்தாண்டு நீட் இருக்கிறதா..? அமைச்சர் சொல்வது என்ன..?
சென்னை: தமிழகத்தில் இந்த நிமிஷம் வரைக்கு நீட் தேர்வு உள்ளது என்று சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்கிற நுழைவுத் தேர்வில் 12ம் வகுப்பு மாணவர்கள் பாஸ் செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் இந்த தேர்வுக்கு எதிராக பல ஆண்டுகளாக குரல் எழுந்து வருவதோடு, தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்துக்கு இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு வேண்டாம், விலக்கு தாருங்கள் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் இருக்கிறது என்றால் அதை எப்படி சரி செய்வது? அதற்கான மாற்று என்ன? வழிமுறைகளை வகுக்க முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுவை தமிழக அரசு அமைத்து இருக்கிறது.
நீட் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அவரின் விளக்கம் இதுதான்: நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு பெறும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
நீட் தேர்வின் பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிமிடம் வரை நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கிறது. எனவே மாணவர்களை எடுத்து கொள்வது ரொம்ப முக்கியம் என்று கூறி உள்ளார்.