Sunday, May 04 12:32 pm

Breaking News

Trending News :

no image

#Vijayakanth கேவலப்படுத்திய சீமான் TROLL VIDEO


விஜயகாந்த் மறைவால் தமிழகமே கலங்கி நிற்கும் சூழலில் நாம் தமிழர் கட்சி சீமான், விஜயகாந்தை கேவலப்படுத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

சினிமாவிலும், அரசியலிலும் தனி இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் இப்போது இல்லை… உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வரும் சூழலில் அரசியல்கட்சி தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர். மற்ற அனைவரின் இரங்கல் செய்திகள் வெளியான போது அதை அனைவரும் ஏற்ற நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இரங்கல் செய்தியும் வெளியானது.

ஆனால் அதில் ஒரு சின்ன மாற்றம்… சீமானின் இரங்கல் அறிவிப்பு வந்த சிறிது நேரத்திலேயே விஜயகாந்தை அவர் கடந்த காலங்களில் கேவலமாக, கிண்டல் செய்து பேசி மேடையில் அசிங்கப்படுத்திய வீடியோவை இணையவாசிகள் வெளியிட்டு உள்ளனர்.

அந்த வீடியோவில் விஜயகாந்த் போல பேசி சீமான் கிண்டல் செய்துள்ளார். அது போக போரடித்தால் கேப்டன் டிவியை போட்டு பார்த்து மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவை பார்க்கும் பலரும், சீமானின் கடந்தகால அரசியல் நிகழ்வுகளை ரீவைண்ட் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Most Popular