Sunday, May 04 11:49 am

Breaking News

Trending News :

no image

மச்சானால் மாட்டிக்கிட்டீங்களே.. என்ன பண்ணுவீங்க…?


குடும்ப அரசியலை எதிர்த்து இப்பவும் கேள்வி கேட்கும் சீமான், மச்சானால் மாட்டிக்கிட்ட சம்பவம் பலருக்கும் தெரிய வந்துள்ளது.

மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகள் மக்களவை தேர்தல் 2024 பற்றியும், கூட்டணி குறித்தும் ஆலோசித்து வருகின்றன.

யார் என்ன பண்ணினால் எனக்கு என்ன என்று எப்போதும் ஆர்எஸ்எஸ் முகமாக பவனி வரும் சீமான், இந்த தேர்தலில் தமது கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளா. ஆண், பெண் வேட்பாளர்கள் சரிக்கு சமம், 50 சதவீதம் போட்டியிட இடஒதுக்கீடு என்று அறிவித்தபடி 20 வேட்பாளர்கள் உள்ளனர்.

அவர்களில் 10 பேர் பெண்கள், 10 பேர் ஆண்கள். ஆரணி, கன்னியாகுமரி, தென்சென்னை, மயிலாடுதுறை என 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சீமான் அறிவித்து இருக்கிறார். இதில் என்ன பிரமாதம் என்று நினைப்பவர்கள் அந்த பட்டியலை உற்று பாருங்கள் என்று விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.

அந்த பட்டியலில் விருதுநகர் தொகுதிக்கான நாம் தமிழர் வேட்பாளரை கைகாட்டி புகைச்சலை ஆரம்பித்து உள்ளனர். அந்த தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் அருள்மொழி தேவன். இவர் வேறு யாருமல்ல…சீமானின் மச்சான். அதாவது அவரது மனைவியின் சகோதரன்.

திமுகவை குடும்ப கட்சி, திமுக என்ன அவங்க வீட்டு கட்சியா? என்று எங்கு மேடை அல்லது மைக் கிடைத்தாலும் கதறி துடிக்கும் சீமான் எதற்காக தமது மச்சானுக்கு வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தார் என்பது தெரியவில்லை.

இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதே விருதுநகர் தொகுதியில் வாய்ப்பு தந்திருக்கிறார். அப்போது அருள்மொழி தேவன் பெற்ற வாக்குகள் 53040. கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர், அவர்களை முன்னிறுத்தாமல் அழகாக கட்டம் கட்டி, கட்சிக்குள் இருந்து துரத்திவிட்டு மச்சானுக்கு எதுக்கு இப்போது மீண்டும் சீட் கொடுத்திருக்கிறார் என்று நாம் தமிழர் தம்பிகள் புலம்ப ஆரம்பித்து இருக்கின்றனர்.

குடும்ப அரசியலை எதிர்ப்பதாக குரல் கொடுக்கும் சீமான், இதற்கு ஏதேனும் பதில் அல்லது விளக்கம் அளிப்பாரா? மற்ற கட்சியினர் விமர்சிக்கும் வகையில் இப்படி செய்துவிட்டாரே என்று நாம் தமிழர் தம்பிகள் பேச ஆரம்பித்துள்ளனர். அனைத்தையும் சைலண்ட்டாக உற்று நோக்கும் மற்ற அரசியல் கட்சியினர், சீமானின் குடும்ப அரசியல் எதிர்ப்பின் லட்சணம் இது தான் என்று ஊதிவிட களம் இறங்கி இருக்கின்றனர்.

Most Popular