Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

இந்திய திரையுலகம் 'ஷாக்'…. பிரபல நடிகர் மறைவு….!


பழம்பெரும் நடிகர் திலிப்குமார் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 98.

கடந்த சில மாதங்களாக மூச்சு திணறல் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார். மும்பையில் உள்ள பிரபல இந்துஜா மருத்துவமனையில் திலீப்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

98 வயது என்பதால் உடல்நல கோளாறு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர். வயது மூப்பு என்பதால் மருத்துவமனையில் திலீப்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.  இந் நிலையில் அவர் இன்று காலமானார்.

இந்திய திரையுலகின் முடிசூடா நடிகர்களில் அவர் ஒருவர். 1994ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது பெற்றார். பத்ம விபூஷனன், பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளன.

சிறந்த நடிகர் என்ற பிலிம்பேர் விருதுகளை அதிக முறை அவர் பெற்றிருக்கிறார். 1944ல் நடிகராக திலீப்குமார் சினிமாவுக்கு அறிமுகமானார். 50 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சிய அவர் கிட்டத்தட்ட 65 படங்களில் நடித்து முத்திரை பதித்தார்.

1998ம் ஆண்டு அவர் கடைசியாக திரைப்படத்தில் நடித்தார். திலீப்குமார் மறைவுக்கு இந்திய திரையுலகமும், பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Most Popular