Sunday, May 04 12:37 pm

Breaking News

Trending News :

no image

உதயநிதி.. நீங்க எம்எல்ஏ தான்..! ஆனாலும் இப்படி பண்ணலாமா..?


சென்னை: கொரோனா பாதித்து பிபிஇ உடையில் இருக்கும் அருண்ராஜா காமராஜை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கட்டிப்பிடித்தது குறித்து ரசிகர்கள் அக்கறையுடன் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அண்மைக்காலமாக கொரோனாவின் தாக்கம் திரையுலக சோக கடலில் மூழ்கடித்து வருகிறது. முக்கிய பிரபலங்கள் பலரின் தொடர் மரணங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இயக்குநர், பாடாலாசிரியர் அருண் ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 38 வயதான சிந்துஜா, கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் காலமானார்.

சிந்துஜாவின் இறுதிச்சடங்கில் அவரது கணவர் அருண்ராஜா காமராஜ் பிபிஇ கவச உடையுடன் வந்திறங்கினர். காரணம் அவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது கோலத்தை கண்டு, அங்கிருந்தவர்கள் கதறி அழுதபடி வந்தனர். ஆனால் உடனிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.

அந்த இறுதிசடங்கு போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. இறுதிச்சடங்கில் திமுக எம்எல்ஏ உதயநிதி கலந்து கொண்டார். அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் ஆர்ட்டிக்கிள் 15 படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட உதயநிதி செய்த ஒரு காரியம் தான் இப்போது எக்குதப்பாக ரசிகர்கள் விமர்சிக்கும்படி ஆகிவிட்டது. கொரோனா பாதித்து, பிபிஇ உடையில் இருந்த அருண்ராஜா காமராஜாவை வெறும் மாஸ்க் மட்டும் அணிந்திருந்த உதயநிதி கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். இது அங்கிருப்பவர்களை மட்டுமல்லாது, பார்ப்போரையும் அதிர வைத்துள்ளது.

தகுந்த நேரத்தில் நண்பனின் துக்கத்தில் பங்கெடுத்து கொண்டாலும், பிபிஇ உடையில் இருக்கும் ஒருவரை கட்டிப்பிடிக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். எங்களுக்கு ரொம்ப முக்கியமான நபரான நீங்கள் இப்படி செய்யலாமா என்று அன்போடும், உரிமையோடும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்களின் உடல்நலம் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Popular