என்ன நடக்குது.....! பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினிக்கு வந்த பிரச்னை…!
சென்னை: போன் மூலமாகவும், இன்ஸ்டாகிராம் மூலமாகவும் பாலியல் தொல்லை கொடுப்பதாக பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவும், அவரது கணவரும் காவல்துறை உதவியை நாடி உள்ளனர்.
சன் மியூசிக் அஞ்சனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் கயல் படத்தின் கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந் நிலையில் அஞ்சனாவுக்கு இப்போது புதிதாக ஒரு பிரச்னை எழுந்துள்ளது.
தமது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாச மெசேஜ் வருவதாகவும், டார்ச்சர் தாங்கமுடியவில்லை என்றும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது பத்தாது என்று ஒரு குறிப்பிட்ட போனில் இருந்து தொடர்ந்து அழைப்பு வருவதாகவும், அதில் ஆபாசமாக பேசுவதாகவும் அஞ்சனா கூறி உள்ளார்.
இந்த விவரத்தை அஞ்சனாவின் கணவரும், நடிகருமான கயல் சந்திரன் தமது டுவிட்டரில் கூறி, தமிழக போலீசாருக்கு டேக் செய்து இருக்கிறார். அஞ்சனாவுக்கு இது நடப்பது முதல் முறையல்ல… பல ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்று நடந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால் விரைவில் இந்த பிரச்னை தீரும் என்று காத்திருக்கிறார் அஞ்சனா.