இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில் முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
புயல், வெள்ள பாதிப்பில் சிக்கி உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் அளவை 1000 கன அடியாக குறைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெள்ள நிவாரண நிதியை 12000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
கடலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் கடலோர மாவட்டங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
568வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆஸி.க்கு எதிரான முதல் டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா களம் காண்கிறது. இந்த தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்தடை காரணமாக இலங்கையில் நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கொத்மலை, பியகம மின் வினியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.