ஹெச்.ராஜாவுக்கு ரிப்போர்ட்டர் வேலை…? டிவி செய்தியாளர் மாஸ்…!
ஸ்ரீவில்லிபுத்தூர்: எங்க கம்பெனிக்கு வாங்க, வேலை தர்றேன் என்று பாஜக பிரமுகர் ஹெச் ராஜாவை பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் அழைத்த வீடியோ இணையத்தில் படு ஜோராக உலா வருகிறது.
பாஜக முக்கிய தலைவர்களில் அதிரடிக்கு பெயர் போனவர். இவரின் டுவிட்டுகள், மேடை பேச்சகள் மாஸ் ரகம்தான். அதிலும் ஹெச் ராஜா பேட்டி தருகிறார் என்றால் அடிதூள்.
நான் முந்தி, நீ முந்தி, செம content கிடைக்கும் என்று அசுர பாய்ச்சலில் செய்தியாளர்கள் இருப்பார்கள். எந்த விளைவுகளை பற்றியும் நினைக்காமல் துணிச்சலாக, ஆவேசமாக கருத்துகளை முன்வைப்பதில் ஹெச் ராஜாவுக்கு ஈடே கிடையாது.
இன்றும் அப்படித்தான்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் ஒரு தரமான சம்பவத்தை செய்து இருக்கிறார். செய்தியாளர்களிடம் கேள்விகளுக்கு வழக்கம் போல் நச்சென்று பதிலளித்து கொண்டிருந்தார் ஹெச் ராஜா.
அப்போது அவர் கூறியதாவது: தில்லை நடராஜனை இழிவாக பேசிய மைனர் விஜயனை கைது செய்யவில்லை. ஆனால் கனல் கண்ணனை மட்டும் கைது செய்துள்ளீர்கள்? காவல்துறையா? ஸ்டாலினின் ஏவல்துறையா? என்று முழங்கினார்.
அப்போது அங்கிருந்த பிரபல செய்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் அண்ணாமலையின் தொலைபேசி உரையாடல் குறித்து கேள்வி எழுப்பினார்.
அவ்வளவு தான்… பொசுக்கென்று ஆவேசமான ஹெச் ராஜா, இது போலியான ஆடியோ, மிமிக்ரி செய்து வெளியிட்டு உள்ளனர் என்று மாவட்ட தலைவர் கூறி இருக்கிறார். இதை பற்றி எல்லாம் கேட்கிறீர்கள்? நான் பதில் சொல்ல முடியாது.
இதே கேள்வியை முதல்வர் ஸ்டாலினிடம் கேட்க முடியுமா? முதுகெலும்பு இருக்கிறதா? பயப்படுகிறீர்கள்? கோழைகள் என்று கேட்கிறார்.
அதற்கு கேள்வி கேட்ட செய்தியாளரோ… கேட்போம் சார்.. வாய்ப்பு இருந்தால் கேட்போம் சார் என்று கூலாக பதிலளிக்க.. கோபத்தின் உச்சிக்கே போனார் ஹெச் ராஜா. நேர்மையாக இருங்க வேலையே இல்லோனாலும் பரவாயில்லை… பறி போய்விடுமா? வாங்க உங்களுக்கு நான் என் வீட்டில் வேலை தர்றேன் என்று கூறுகிறார்.
அடுத்த விநாடியே நீங்க வாங்க சார்… நான் கொடுக்கிறேன் எங்க கம்பெனியில் நான் வேலை வாங்கி தரேன் என்று கூறி அப்படிய நகர்ந்து போய்விட்டார் ஹெச் ராஜா.