எடப்பாடி தலைக்கு மேல் தொங்கும் கத்தி…? சூடு பிடிக்கும் அரசியல்களம்
டெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது.
தமது ஆட்சி காலத்தில் உறவினர்களுக்கு ரூ. 4833 கோடியில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை ஈபிஎஸ் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது குற்றச்சாட்டாகும். இது குறித்து திமுக தொடர்ந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தொடக்க விசாரணை 3 மாதங்களில் முடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2018ம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக ஈபிஎஸ் உச்ச நீதிமன்றம் போக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின்னர் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவே இல்லை.
இப்படிப்பட்ட சூழலில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு இன்று இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. வழக்கில் கோர்ட் பிறப்பிக்க உள்ள உத்தரவை பொறுத்தே தமிழக அரசியல் களம் மாறும், அதிமுகவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.