Sunday, May 04 12:10 pm

Breaking News

Trending News :

no image

வருகிறது வாட்ஸ் அப்பில் புதிய வசதி…! இளைஞர்களே… ரெடியாகுங்க


ஒரே சமயத்தில் பல சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையிலான வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தாதவர்களே இல்லை. எங்கு நோக்கினும் சகலமும் வாட்ஸ் அப் மயம் ஆகிவிட்டது. இப்போது வாட்ஸ் அப் பயனாளிகள் ஹேப்பி ஆகும் வகையில் ஒரு புதிய செய்தியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த அம்சம் ரிலிசாகும் என்று வில் காட்கார்டு, மார்க் ஜூக்கர்பர்க் ஆகியோர் அறிவித்துள்ளனர். மல்டி டிவைஸ் பியூச்சர் (multi device feature) எனப்படும் இந்த அம்சம் ஒரே நேரத்தில் பல கேஜட்டுகளில் (gadget) ஒற்றை வாட்ஸ் அப் கணக்கு இயங்கும்.

அதிலும் ஒரே நேரத்தில் ஆரம்பத்தில் ஒரு ஸ்மார்ட் போனிலும், 4 வெவ்வேறு சாதனங்களிலும் இயங்கும். சுருக்கமாக சொன்னோம் என்றால் ஒரு நேரத்தில் பல ஸ்மார்ட்போன்களை சப்போர்ட் செய்யாது.

அதாவது, வாட்ஸ் அப் வெப், வாட்ஸ்அப் டெஸ்க்டாப், பேஸ்புக் போர்ட்டல் ஸ்மார்ட் டிஸ்பிளே போன்ற மற்ற வடிவங்களில் பயன்படுத்தலாம். இதோடு disappearing mode, view once ஆகியவற்றை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் தரப்படும்.

Most Popular