கொரோனா பாசிட்டிவ்வா…? மாரடைப்பு கன்பார்ம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் என்று ஆய்வில் வெளியான தகவல் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.
கொரோனாவின் 2வது அலையால் இந்தியா மட்டுமல்ல… உலக நாடுகளே படாதபாடுபட்டு கொண்டிருக்கின்றன. மற்ற நாடுகளில் கொரோனா 3வது அலை வீசி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
நிலைமை இப்படி இருக்க….. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த தகவல் லேன்செட் என்ற ஆய்வு பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வை நடத்தியது சுவிடன் நாட்டின் உமேயா பல்கலைக்கழகம். அதன் ஆராய்ச்சியாளர் பொன்சேகா ரோட்ரிக்ஸ் கூறி உள்ளதாவது:
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். அதை தான் இந்த முடிவுகள் நமக்கு காட்டுகின்றன. இந்த கொரோனா தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகரித்து உள்ளது. அதை ஆய்வில் கண்டறிந்து உள்ளோம் என்று கூறி உள்ளார்.