Sunday, May 04 12:36 pm

Breaking News

Trending News :

no image

சொன்னது படி நடந்தது..! அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பிடன்…!


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் 290 வாக்குகள் பெற்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார் ஜோ பிடன்.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 3ம் தேதி நடைபெற்று முடிந்தது. கொரோனா காலத்தில் அரங்கேறிய தேர்தல் பிரச்சாரம் முடிந்து வாக்குப்பதிவும் நிறைவு பெற்றது.

இந்த பிரச்சாரம் பிரபலம் ஆனதை விட, அதன் தேர்தலின் போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி பிரபலம் ஆனது. கிட்டத்தட்ட 4 நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டன… எண்ணப்பட்டன… எண்ணப்பட்டு கொண்டே இருந்தன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க… தான் ஜெயித்துவிட்டதாக சுயமாக அறிவித்து ஆச்சர்யம் காட்டினார் டிரம்ப். ஆனால் 4 நாட்கள் பரபர வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கிட்டத்தட்ட 290 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக மகுடன் சூடி இருக்கிறார் ஜோ பிடன். அவரை எதிர்த்த டிரம்ப் கிட்டத்தட்ட 214 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் வென்று, அமெரிக்காவின் முதல் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தான் அனைத்து அமெரிக்கர்களுக்கும், தமக்கு வாக்களிக்காதவர்களுக்கும் அதிபராக இருப்பேன் என்று நன்றி தெரிவித்து இருக்கிறார் ஜோ பிடன்.

அமெரிக்காவின் புதிய அதிபராக வென்றுள்ள ஜோ பிடனுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளை கூறி உள்ளனர். கொரோனா காலத்தில் வென்று புதிய அதிபராகி இருக்கும் பிடனுக்கு முன் பல்வேறு சவால்கள் உள்ளன. அவை அனைத்தையும் சமாளித்து வெற்றி காணுவார் என்கின்றனர் சர்வதேச அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் பார்வையாளர்கள்.

Most Popular