எடியூரப்பா குடும்பத்தை விடாத கொரோனா...! இப்போது மகளுக்கும் பாதிப்பு
பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவை தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா உறுதியாக உள்ளது.
கர்நாடகாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதை தடுப்பது பற்றி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடியூரப்பா அடிக்கடி ஆலோசனை நடத்தி வந்தார்.
அதே நேரத்தில் அவரது இல்ல அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆகையால் அவர் 5 நாட்கள் வீட்டில் தனிமையில் இருந்தார். பின்னர் வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில் எடியூரப்பாவுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எடியூரப்பா மகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.