முதலமைச்சருக்கு கொரோனா..? 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார்
டேராடூன்: உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் முதலமைச்சராக திரிவேந்திர சிங் ராவத் உள்ளார். அவரின் சிறப்பு பணி அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
ஆகையால் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தம்மை 3 நாட்கள் தமது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவரது குடும்பத்தில் உள்ளவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
அவர்களின் சோதனை முடிவுகளில் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த விவரங்களை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
ஆண்டவன் கருணையாலும், எல்லாருடைய வாழ்த்துகளாலும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும் முன் எச்சரிக்கையாக 3 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.