Sunday, May 04 12:45 pm

Breaking News

Trending News :

no image

துரைமுருகனுக்கு புரொமோஷன்..! வரும் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்..!


சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி கூடும் என்று அக்கட்சி அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டு உள்ளதாவது: தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், 9-9-2020 புதன்கிழமை காலை 10.00 மணி அளவில், எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இதில் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருள் : பொதுச்செயலாளர் - பொருளாளர் தேர்வு', எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 3-9-2020 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், எனது தலைமையில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular