Sunday, May 04 12:53 pm

Breaking News

Trending News :

no image

ஆஸ்பத்திரியில் தரையில் படுக்க வைக்கப்பட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏ மனைவி…! என்ன நடக்குது…?


லக்னோ: ஒரு எம்எல்ஏ மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட மருத்துவமனையில் தரையில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிசயத்தக்க மாநிலமாக போற்றப்படுவது உத்தரப்பிரதேச மாநிலம். எந்த பிரச்சனை என்றாலும் அது உ.பி. மாநிலத்தில் மட்டும் தலைகீழாக இருக்கும். இப்போது கொரோனா பிரச்னை இருக்க, உ.பியில் கொரோனா தொற்று எல்லாரையும் உண்டு இல்லை என்று உலுக்கி வருகிறது.

நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்தால் அப்படி எல்லாம் இல்லை என்று அங்கிருந்து அறிக்கையோ, உத்தரவோ ஏதோவொன்று வரும். அப்படிப்பட்ட மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ மனைவியை கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் தரையில் படுக்க வைத்து இருக்கிறார்கள்.

இது என்ன கொடுமை என்று பார்ப்பதற்குள் அந்த எம்எல்ஏவோ அரசை பற்றி பக்கம், பக்கமாக குற்றப்பத்திரிகை வாசிக்கிறார். தமக்கு நேர்ந்த கொடுமைகளை வீடியோவாக ரிலீஸ் செய்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளார்.

கொரோனா தொற்று பாதித்த தமது மனைவியை ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்கிறார் ஜஸ்ரானா தொகுதி பாஜக எம்எல்ஏ ராம்கோபால் லோதி. அங்கே மருத்துவமனையில் இடமில்லை என்று கூறி தரையில் படுக்க வைக்கப்பட்டு இருக்கிறார்.

அதுவும் 5 நிமிடம், 10 நிமிடம் இல்லை… கிட்டத்தட்ட 3 மணிநேரம் வெறும் தரையில் எம்எல்ஏ மனைவி படுக்க வைக்கப்பட்டு இருந்திருக்கிறார். ஒரு வழியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு ராம்கோபால் லோதி விவரத்தை சொல்ல ஒரு வழியாக எம்எல்ஏ மனைவிக்கு படுக்கை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு லோதி வீட்டுக்கு வந்துவிட்ட நிலையில் தமது மனைவி உயிருடன் இருக்கிறாரா,இல்லையா என்பது தெரியாமல் தவிப்பதாக கூறுகிறார் ராம்கோபால் லோதி. ஒரு மாநிலத்தில், மத்தியில் ஆளும் கட்சியின் எம்எல்ஏ மனைவிக்கு தரப்பட்ட மருத்துவமனை சிகிச்சை பற்றிய செய்தி அனைவரையும் கலங்கடித்துள்ளது. எம்எல்ஏ மனைவிக்கே அந்த மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமையை பார்க்கும்போது மாநிலத்தின் மற்ற பகுதிகள் எப்படி இருக்கும் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

Most Popular