தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…! MASK மறந்துடாதீங்க
சென்னை: கேரளாவில் கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலையாக பார்க்கப்படுகிறது.
சிறிது காலம் எங்கே என்று தேடப்பட்டு வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது நடமாட தொடங்கி இருக்கிறது. உலக நாடுகளில் சிங்கப்பூரை சிதைக்க தொடங்கி உள்ள கோவிட் 19, கேரளாவை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது.
அங்கு 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். சுகாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ள நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்திலும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்துள்ளது.
படிப்படியாக இந்த தொற்றுக்கு பலர் ஆளாகி வருவதாக தெரிகிறது. தற்போது வரை 30 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருக்கும் நிலையில், மேலும் 7 பேருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
தற்போது 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுவதால், பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.