பணம் ஜாக்கிரதை…! வாடிக்கையாளர்களை வார்ன் செய்த பிரபல வங்கி…!
டெல்லி: வாடிக்கையாளர்கள் அனைவரும் மோசடியாளர்களிடம் இருந்து தங்களது கணக்கில் உள்ள பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்க்கிங்கை பயன்படுத்தி வரும் பட்சத்தில் ஸ்டேட் பேங்க் இந்தியா முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந் நிலையில் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை எஸ்பிஐ வெளியிட்டு உள்ளது. டுவிட்டர் வழியாக இந்த அறிவிப்பை வங்கி நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது.
https://onlinesbi.com என்ற இணையதளம் மூலம் மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களது லேப்டாப், கணினியை அவ்வவ்போது ஆன்ட்டி வைரஸ் பயன்படுத்தி ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
வங்கி கணக்கின் இணையதள பாஸ்வேர்டை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக் கொள்ள வேண்டும். அக்கவுண்ட்டில் பரிவர்த்தனை எப்போது நடந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மொபைல், இ மெயில் மூலம் வங்கி பணியாளர்கள் என்று தொடர்பு கொள்ளும் நபர்களை நம்பக்கூடாது. எந்த ஒரு மொபைல் ஆப்பையும் பதிவிறக்கம் செய்யக்கூடாது. பொதுஇடங்களில் உள்ள வைபையை பயன்படுத்தக் கூடாது என்று வங்கி எச்சரித்துள்ளது.