Sunday, May 04 12:34 pm

Breaking News

Trending News :

no image

இன்றைய TOP 10 News…!


தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை  பார்க்கலாம்:

தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதி செய்து தரப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார்.

மத்திய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது சரியே என்று அதற்கு முழு அதிகாரம் உள்ளது என்று மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி இருக்கிறது.

பாஜக ஆட்சி நடந்து வரும் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது கண்களுக்கு தெரியவில்லையா என்று பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

மணிப்பூரில்  வன்முறையின் போது சேதப்படுத்தப்பட்ட வழிபாட்டு தலங்களை மறு சீரமைக்க மாநில அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

உளுந்தூர்பேட்டை அருகே அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

574வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

Most Popular