விஜயகாந்துக்கு வந்த சோதனை…! கட்சியின் முக்கிய அறிவிப்பு
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் விஜயகாந்த் இருக்கும் நிலையில் தேமுதிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
எப்படி இருந்த மனுஷன் என்று எல்லோரும் வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு இருந்தவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சி ஆரம்பித்து ஓஹோவென்று வந்தவர் இன்று அரசியலில் வாய்ஸ் இன்றி இருக்கிறார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிவிட்ட நிலையில், தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதை மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்து, தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவரத்தை கட்சியின் நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவும் தாக்கி இருப்பது கட்சி தொண்டர்கள் மத்தியில் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.