குடிமகன்களுக்கு கொண்டாட்டம் தான்..! பார்கள், பப்புகள் ஓபன் பண்ணிய அரசு
பெங்களூரு: கர்நாடகாவில் இன்று முதல் பார்கள், கேளிக்கை விடுதிகள் திறக்க எடியூரப்பா அரசு அனுமதி தந்திருக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த பார்கள், கேளிக்கை விடுதிகள் 5 மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளன. மதுபானங்கள் மூலம் இதுநாள் கிடைத்து வந்த வருவாய் நின்று போனது. நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. அதுவும் இங்கல்ல… கர்நாடகாவில்..! அம்மாநிலத்தில் எடியூரப்பா அரசானது மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகளை இன்று முதல் திறந்து கொள்ள அனுமதி தந்திருக்கிறது.
முக்கியமாக சில வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசு வெளியிட்டு உள்ளது. பார்கள், கேளிக்கை விடுதிகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு தான் அனுமதி. உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க கருவிகள், சானிடைசர் நுழைவு வாயிலில் இருக்க வேண்டும்.
பார், கேளிக்கை விடுதி ஊழியர்கள் வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற கூடாது. மதுபானம், உணவை கதவின் அருகே வைக்க வேண்டும். ஊழியர்கள் கட்டாயம் மாஸ்க், கிளவுஸ் அணிய வேண்டும்.
வாகனம் நிறுத்துமிடத்தை சுத்தம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் உள்ளே வர, வெளியே செல்ல தனித்தனி வழிகள் அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். குளிச்சாத எந்திரத்தை 24 முதல் 30 டிகிரி செல்சியலில் வைக்க வேண்டும்.
கட்டணத்தை முடிந்த வரை ஆன்லைனில் செலுத்த ஊக்குவிக்க வேண்டும். வாடிக்கையாளர் சென்ற பிறகு அவர் நின்ற இடத்தை சுத்தப்படுத்த வேண்டும் என வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.