Sunday, May 04 01:11 pm

Breaking News

Trending News :

no image

மோடியை ஒரு லெட்டரில் ‘தெறிக்கவிட்ட’ ஒண்ணாங்கிளாஸ் மாணவி…!


கனோஜ்: உங்களால் தான் விலைவாசி ஏறிடுச்சு, பென்சில் விலை அதிகமானதால் அதை கேட்டால் அம்மா அடிக்கிறாங்க என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் ஒன்றாம் வகுப்பு மாணவி.

நாட்டில் விலைவாசி எங்கோ போய்விட்டது… ஆட்சி கட்டிலில் ஏறிய போது என்ன விலைவாசி, இப்போதைய நிலை என்ன எதிர்க்கட்சிகள் நாள்தோறும் கூப்பாடு போட்டு வருகின்றன.

குறிப்பாக ஜிஎஸ்டி வரியால் பல பொருட்களின் விலை எங்கோ சென்றுவிட்டது. தயிர், வெண்ணெய்,  பென்சில், ஷார்ப்பனர், ரப்பர் என ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாத பொருட்களே இல்லை என்ற அளவுக்கு போய்விட்டது.

இப்படிப்பட்ட சூழலில் உங்களால் தான் விலைவாசி ஏறி போயிடுச்சு… பென்சில் வாங்கி தர சொன்னா விலை ஜாஸ்தின்னு சொல்லி எங்கம்மா அடிக்கிறாங்க என்று பிரதமர் மோடியை கேள்வி கேட்டு இருக்கிறார் ஒன்றாம் வகுப்பு மாணவி.

அந்த மாணவியின் பெயர் கிர்தி டுபே. உத்தரபிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டம் சிப்ரமாவ் நகரை சேர்ந்தவர் இந்த மாணவி. படிப்பதோ ஒன்றாம் வகுப்பு தான். ஆனால் இவரின் கடிதம் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அந்த மாணவியின் கடிதத்தில் உள்ள வரிகள் இவைதான்:

என் பெயர் கிருதி துபே. நான் 1ம் வகுப்பு படிக்கிறேன். மோடிஜி, நீங்கள் விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். எனது பென்சில் மற்றும் ரப்பர் (அழிப்பான்) விலை உயர்ந்து, மேகியின் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இப்போது என் அம்மா பென்சில் கேட்டதற்காக அடிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்? மற்ற குழந்தைகள் என் பென்சிலைத் திருடுகிறார்கள் எனறு கேட்டு தெறிக்கவிட்டு இருக்கிறார்.

அவரின் இந்த கேள்வியும் அதன் பின்னணியில் உள்ள விஷயங்கள் எவ்வளவு ஆழமானவை மட்டுமல்ல, கருத்து செறிவு மிக்கது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு நாட்டின் விலைவாசி தெரிந்த அளவு நாட்டில் ஆளும் வர்க்கத்துக்கு தெரியவில்லையே என்று வேதனை குரல்கள் எழுந்துள்ளன.

இல்லை… இப்படி ஒரு கடிதம் எழுதப்படவே இல்லை, அனைத்தும் பொய் என்று பாஜக தரப்பிலும், ஆளும் தரப்பிலும் சொல்லப்பட்டாலும், அதை எழுதியது தமது மகள் தான் என்கிறார் தந்தை விஷால் துபே. இவர் ஒரு வழக்கறிஞரும் கூட.

இது பற்றி அவர் கூறி இருப்பதாவது: இந்த கடிதம் என் மகளின் கடிதம் தான். அதில் இருப்பது அவரின் மன் கீ பாத் (மனதின் குரல்). பள்ளியில் பென்சில் தொலைத்ததால் அவள் அம்மாவிடம் திட்டு வாங்கினாள் என்று தெரிவித்து உள்ளார்.

மாணவி கிர்தி டுபே கடிதம் இந்தியில் எழுதப்பட்டு இருந்தாலும் அதன் வைரலாகி வருவதை மட்டும் யாராலும் தடுக்க முடியவில்லை….!

Most Popular