கந்துவட்டி… கதறி அழும் பெண்மணி.. கதறல் வீடியோ
திருச்சியில், கந்துவட்டிக்கு பணம் வாங்கி திருப்பி தராத பெண்மணியை வீட்டில் அடைத்து வைத்த கொடுமை வீடியோ வெளியாகி இருக்கிறது.
அரியமங்கலம் பால் பண்ணை விஸ்வாஸ் நகரில் இருப்பவர் மதியழகன். சினிமா துணை நடிகர். இவர் மனைவி மாலதி, உமாராணி என்பவரிடம் 6 லட்சம் ரூபாய்க்கு கந்துவட்டி வாங்கியதாக தெரிகிறது.
ஆனால் பணத்தை அவர் திருப்பி தரவில்லை. இதையடுத்து பணம் தந்த உமாராணி, மாலதியை தமது வீட்டில் 2 மாதமாக அடைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த மதியழகன் தம்பி வழக்கறிஞர் சதிஷ், திருச்சியில் உள்ள வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் நேராக உமாராணி வீட்டுக்கு சென்று நியாயம் கேட்ட போது மாலதியை விட மறுக்கவே காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் காவல்துறை உதவியுடன் மாலதியை உமாராணி வீட்டில் இருந்து மீட்டுள்ளனர்.
இந்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. தம்மை மீட்க வந்தது தெரியாமல் கொடுமையின் உச்சத்தில் அந்த பெண் பதறி போய், காவல்துறை அதிகாரியின் காலில் விழுவது, என்ன நடக்கிறது என்று அறியாமல் பதறியபடி இங்கும் அங்கும் தவிப்பது என்ற அந்த வீடியோ காட்சிகள் பார்ப்போரை திகிலடைய வைத்துள்ளது.
அந்த காட்சிகள் செய்தியின் கீழே வீடியோவாக கொடுக்கப்பட்டு உள்ளது.