Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

6ம் கட்ட பிரச்சாரத்தை நோக்கி நகரும் எடப்பாடி…! பிப். 17ம் தேதி தூத்துக்குடியில் பிரச்சாரம்


சென்னை: 6ம் கட்டமாக தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பற்றிய அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். இந் நிலையில் வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என்னும் பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

5 கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்துள்ள அவர், 6ம் கட்டமாக தூத்துக்குடி செல்கிறார். வரும் 17ம் தேதி தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது பிரச்சாரத்தை துவங்குகிறார். வரும் 18 மற்றும் 19 தேதிகளில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

Most Popular