கொரோனாவும்… தடுப்பூசியும்…! முக்கிய விஷயத்தை 'டுவீட்' பண்ணிய பிரதமர் மோடி…!
டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
உலகம் முழுவதும் ஓயாத கொரோனா அலை இந்தியாவையும் அடித்து துவைத்து வருகிறது. அண்மைக்காலமாக குறைவான எண்ணிக்கையில் பதிவான கொரோனா தொற்றுகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே அதிக வரவேற்பு இல்லாத நிலை தான் காணப்பட்டு வருகிறது. இந் நிலையில் தாம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: எய்ம்சில் நான் கொரோனாவுக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மருதுவர்கள், விஞ்ஞானிகள் கொண்டு சென்றது நினைத்து பார்க்க வேண்டிய ஒன்று. கொரோனா தடுப்பூசிக்கு தகுதியானவர்களை நான் அழைக்கிறேன். கொரோனா இல்லாத நாடாக நாம் இந்தியாவை மாற்றுவோம் என்று கூறி உள்ளார்.