சென்னைக்கு ஆபத்து…! மக்களே உஷார்
சென்னையில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. பலத்த மழை காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும் முனைப்பாக மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில், சென்னையில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டு இருக்கிறது. இது குறித்த அறிவிப்பின் விவரம்;
சென்னையில் 15.11.2023 காலை 08.30 மணி வரை கனமழை பெய்யும். இதனால் சென்னைக்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.