தங்கம் விலை… தாங்க முடியல…? பெண்கள் ஷாக்
சென்னை: தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம், பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பல வாரங்களாக லேசான ஏற்ற, இறக்கத்துடன் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலையில் சர்ரென்று மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்த மாதத்தின் முதல் நாளில் நேற்று தங்கத்தின் விலை குறைந்திருந்தது.
ஆனால் இன்று எதிர்பாராத தருணமாக, தங்கத்தின் விலை ஜிவ்வென்று ஏறி இருக்கிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் விலை 65 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் 520 ரூபாய் அதிகரித்து 47,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் 71 ரூபாய் உயர்ந்து 6453 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 568 ரூபாய் அதிகரித்து 51624 ஆக இருக்கிறது. வெள்ளி விலையும் சற்றே உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 1 ரூபாய் உயர்ந்து 83.50க்கும், ஒரு கிலோ வெள்ளி 83,500க்கும் விற்கப்படுகிறது.