வாத்தியாரை செருப்பால் துரத்தி, துரத்தி அடித்த பெற்றோர்…! பகீர் வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பள்ளி ஆசிரியரை மாணவனின் பெற்றோர், பள்ளிக்குள் புகுந்து ஓட, ஓட அடித்து துவைத்துள்ளனர்.
எட்டயபுரம் அருகே உள்ளது கீழநம்பிபுரம் என்ற கிராமம். அங்கு வசிக்கும் முனியசாமி, செல்வி தம்பதி மகன் பிரகதீஷ். அதே ஊரில் உள்ள தொடக்க பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறார்.
வகுப்பில் மாணவர்கள் விளையாடும்போது, பிரகதீஷ் கீழே விழுந்துள்ளார். பார்த்து விளையாடும்படி ஆசிரியர் பாரத் என்பவர் அவனை கண்டித்துள்ளார். பள்ளி முடிந்து வீடு சென்ற பிரகதீஷ், வாத்தியார் தன்னை அடித்துவிட்டதாக பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.
அவ்வளவுதான்… நேராக பள்ளிக்கு வந்த சிவலிங்கமும், செல்வியும் ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது பையனை எப்படி அடிக்கலாம் என்று கேள்வி கேட்டபடி சிவலிங்கம், ஆசிரியர் பாரத் பள்ளி வளாகத்தில் துரத்தி, துரத்தி அடித்துள்ளார்.
அவர் பின்னாலே சென்ற செல்வி, கையில் செருப்பை வைத்துக் கொண்டு ஆசிரியர் பாரத்தை பின்னி உள்ளார். சம்பவம் அறிந்த போலீசார் பள்ளி சென்று பெற்றோர் சிவலிங்கம், செல்வி மற்றும் மாணவனின் தாத்தா முனியசாமி ஆகியோரை கைது செய்துள்ளனர். பள்ளியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.