Sunday, May 04 01:06 pm

Breaking News

Trending News :

no image

ஆப்கானிஸ்தானை பிடித்தது தாலிபான்கள் இயக்கம்…! இந்தியர்களின் நிலை…?


காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் பிடித்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களின் நிலை என்ன என்பது பற்றி கவலையான கேள்விகள் எழுந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தாலிபான்களுக்கும் பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் முற்றாக வெளியேறிவிட்ட நிலையில் பெரும்பாலான மாகாணங்களை தாலிபான் பிடித்துவிட்டது.

தலைநகர் காபூலை நோக்கி தாலிபான் படைகள் இன்று முழு வீச்சில் இறங்கின. தற்போது காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதால் அந்நாட்டில் அதிகாரம் கைமாறி இருக்கிறது.

அரசு படைகள் முற்றிலும் சரண் அடைந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் இப்போது தாலிபான்கள் வசம் ஆகிவிட்டது. அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக முன்னாள் அமைச்சர் அலி முகமது ஜலாலி நியமிக்கப்பட்டு உள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளது. தாலிபான்கள் கையில் அதிகாரம் போய் இருப்பதால் அங்குள்ள இந்தியர்களின் நிலை என்ன என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.

Most Popular