கோவை மாவட்ட மக்களே… நாளை எச்சரிக்கையாக இருங்க..! வெளியான புது தகவல்…!
டெல்லி: கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை கொட்டி வருகிறது. மழையின் எதிரொலியாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவை தவிர திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு பெய்யக் கூடும் என்று அறிவித்துள்ளது.