திமுக தொண்டர்.. அதிமுக EX. அமைச்சர் செய்த சம்பவம்..! வேற லெவல்…!
திமுகவின் தொண்டருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்துள்ள உதவி பற்றிய விவரம் வெளியாகி பாராட்டுக்களை பெற்றுள்ளது.
பொதுவாக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக திமுக, அதிமுக இருப்பது தெரிந்த ஒன்று தான். அதையும் தாண்டி எப்போதாவது உணர்வு ரீதியாக அல்லது மனிதநேய ரீதியாக சில சம்பவங்கள் அல்லது சில உதவிகள் இரு தரப்பிலும் தொண்டர்கள் தரப்பில் நிகழ்வது உண்டு.
அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி ஓடி கொண்டு இருக்கிறது. அதிமுக முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் திமுக தொண்டருக்கு செய்த ஒரு உதவி பற்றி எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவு வெளியாகி உள்ளது.
அந்த பதிவில் உள்ள விவரம் இதோ:
https://twitter.com/Dhanaakutty1/status/1735232142618382815
முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, திமுக முரட்டுத் தொண்டனின் கோடான கோடி நன்றிகள்.....!
கடந்த டிசம்பர் 9 தாம் தேதி கும்பகோணத்திலிருக்கும் எனது மாமியாருக்கு நெஞ்சுவலிப்பதாகவும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு என்னுடைய மாமனார் அழைத்து வந்துகொண்டிருப்பதாகவும் எனக்கு தகவல்தந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு வரச்சொன்னார்கள்.
நானும் பதறியபடி உடனே நண்பர் ஒருவரின் காரில் தஞ்சைக்கு கிளம்பினேன்.
கந்தர்வக்கோட்டை தாண்டுவதற்குள் சொந்தம்பந்தத்தினரின் அனேக அழைப்பு விசாரணை பேசிக்கொண்டே சென்றதால் என்னுடைய செல்போனின் சார்ஜ் முடிந்து செல்போன் அணையக்கூடிய நிலையில்,என்னோடு வந்திருந்த நண்பரின் செல்போனில் இருந்து திமுக வடக்கு மாவட்டச்செயலாளர் அண்ணன் செல்லபாண்டியன் அவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் யாரும் மருத்துவர்களிடம் பரிந்துரைக்கு சொல்ல முடியுமா என்பதற்காக போன் பண்ணினேன் இரண்டுமுறை.
இரண்டு முறையும்அவர் போனை எடுக்கவில்லை .
தஞ்சை போகும் வரைகூட அந்த எண்ணுக்கு அவர் மிஸ்டுகால் பார்த்துக் கூட கூப்பிடவில்லை .
எண்ணுடைய செல் போனும் சார்ஜ் இல்லாமல் நின்றும் விட்டது நான் என்ன செய்வதென்று புரியாமல் ,இருக்கும் போதே வலி அதிகமானதால் தஞ்சாவூரில் இருக்கும் காமாட்சி எனும் தனியார் மருத்துவமனையில் என்னுடைய மாமியார் அவர்களை சேர்த்து விட்டதாக நண்பனின் செல்போனுக்கு தகவல் தந்தார்கள்.
நானும் அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போதுதான் அந்த மருத்துவமனை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜர் மகனின் மருத்துவமனை என்பதை அறிந்தேன்.
முன்னாள் அதிமுக அமைச்சரின் மருத்துவமனை என்பதால் புதுக்கோட்டை முன்னாள் அதிமுக அமைச்சர் அன்பு அண்ணன் விஜயபாஸ்கரிடம் சிறப்பாக கொஞ்சம் நோயாளியை கவனிக்கச் சொல்லி உதவி கேட்கலாமா என்று நண்பரிடம் தயங்கியே சொன்னேன்.
ஏனென்றால், நாம திமுக உதவி செய்வாரோ என்கிற சந்தேகத்தில் . என் நண்பரும் மருத்துவ உதவி தானே நிச்சயமாக செய்வார் என்று தன்னிடம் விஜயபாஸ்கர் அவர்களின் எண் உள்ளது பேசு என்றார் . அவர் கொடுத்த எண்ணிற்கு நான் அண்ணன் விஜயபாஸ்கர் எண்ணுக்கு போன் பண்ணினேன் ஆனால் அவரும் போனை எடுக்கவில்லை .
சரி நடப்பது நடக்கட்டும் என்று மருத்துவமனையில் அமர்ந்திருந்தேன் .
மருத்துவமனையில் நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று என் மாமனாரிடம் மருத்துவமனை ஊழியர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
நான் அண்ணன் விஜயபாஸ்கருக்கு பண்ணிய எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது நான் போனை அட்டன் செய்தேன் அப்போது எதிர் முனையில் நான் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் உதவியாளர் அவர் எண்ணிற்கு அழைத்திருக்கிறீர்கள் நீங்கள் யார் என்ன விசயம் என்று கேட்டார்.
நானும் நான் முன்னாள் புதுக்கோட்டையின் நகர்மன்றத்தலைவர் ராமதிலகம் உடையப்பனின் மகன் அண்ணணிடம் பேசவேண்டும் என்றேன் உடனே போனை அண்ணன் வியபாஸ்கரிடம் கொடுத்தார் உதவியாளர்.
நானும் வணக்கம் சொல்லிவிட்டு நிலைமையை கலக்கத்தோடு சொல்லி முன்னாள் அமைச்சர் காமராஜரிடம் சொல்லி, என் மாமியாருக்கு சிறப்பான சிகிச்சை கொடுக்கச் சொல்லுங்க அண்ணா என கேட்டேன்.
அவரும் அப்படியே லைன்னில் இருங்க என்று என்னிடம் சொல்லிவிட்டு இன்னொரு போனில் காமராஜ் அவர்களின் மகன் அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான மருத்துவரிடமே பேசி,இவர் திமுக காரர் தான் புதுக்கோட்டையில் முக்கியமான குடும்பம் நல்லா சிகிச்சை கொடுங்க என்று என் அத்தையின் மெடிக்கல் ஹிஸ்டரியையே என்னை லைன்னில் வைத்துக்கொண்டே கேட்டறிந்தார்.
பின் என்னிடம் கவலைப்படாத தம்பி என்று சொல்லிவிட்டு ஆறுதல் கூறி நான் மேலும் பார்த்துக்கொள்ளுகிறேன் என்றார் .
அறுவை சிகிச்சையும் நல்லபடியாக முடிந்தது இன்றைக்கு டிஸ்சார்ஜ் சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தை ரசீதாக கொண்டுவந்து மருத்துவமனை ஊழிர்கள் கொடுத்தார்கள் .
அண்ணன் விஜயபாஸ்கரிடம் இன்றும் போன் பண்ணினேன் நன்றிசொல்ல, நன்றியும் சொன்னேன், அண்ணா இன்று டிஸ்சார்ஜ் என்று சொன்னேன் பில் எவ்வளவு போட்டிருக்காங்க என்று கேட்டார் அண்ணன் அவர்கள்.
பில்லில் இருந்த தொகையை சொன்னேன் ஒருநிமிடம் லைன்ல இருங்க என்று இன்னொரு போனில் மருத்துவமனை நிறுவக தலைவரிடம் பேசினார் ,பேசிவிட்டு என்னிடம் சொன்னார்,
தம்பி, xxx ஆயிரம் குறைத்துக் கட்டுங்கள் நான் குறைக்கச் சொல்லிவிட்டேன் என்றார்.
எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
மகிழ்வோடு நன்றி அண்ணா என்றேன்.....! அவர் குறைத்துக் கொடுக்க சொன்னத் தொகை நான் நம்பமுடியாத தொகை.
கட்சிக்காரன் போன் செய்து போனை அட்டன் பண்ணவில்லை என்றாலும் 5 நாட்களாகியும் அந்த எண்ணிற்கு யார் நீங்கள் என்று கூட கேட்காத நமது மாவட்டச்செயலாளர் எங்கே..? என்று மிக நீ……ண்ட பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த பதிவை பார்க்கும் பலரும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை வாழ்த்தி வருகின்றனர். திமுக தொண்டர் என்றால் உள்ளது உள்ளபடியே விவரத்தை வெளியிட்ட அவருக்கும் நன்றி கூறி வருகின்றனர் பலரும்…! அதே வேளையில் இந்த செய்தி உண்மை தானா என்றும் பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். உண்மை என்றால் பாராட்டுக்கள், வாழ்த்துகள்… பொய் என்றால் அதை விஜயபாஸ்கர் தரப்பு தெரிவிக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் கருத்தாக இருக்கிறது.