Sunday, May 04 12:29 pm

Breaking News

Trending News :

no image

உதயநிதி ஸ்டாலினை கூப்பிடுங்க… இங்க வந்தே ஆகணும்.. கூவிய பெண்…! அலறிய போலீஸ்


சென்னை: 200 அடி செல்போன் டவரில் ஏறிய பெண் ஒருவர் அடம்பிடித்து அரண்டு போனது போலீஸ்.

திமுகவின் அடுத்த முகமாக அறியப்படுபவர் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் எம்எல்ஏவாக அவரது செயல்பாடுகள் தமிழகத்தையே கவர்ந்து வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் அவரின்  செயல்பாடுகளினால் கவரப்பட்டு அவருக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி நாளுக்கு நாள் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு வரவேற்பு அட்டகாசமாக உள்ளது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது இவரை எதிர்த்து கேள்வி கேட்ட அனைத்து கட்சியினரும் இப்போது வாயடைத்து போய் இருக்கின்றனர்… அந்தளவுக்கு அவரது செயல்பாடுகள் பாராட்டும் படியாக உள்ளது.

தமது அயராத உழைப்பால் தனி இடத்தையும், பாதையும் வகுத்து அதில் இப்போது வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறார். குறிப்பாக பெண்கள் அவர் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் அளவிட முடியாதது. அவர் எங்கு சென்றாலும் எங்க வீட்டு பிள்ளை, எங்க பேரன், எங்க அண்ணன் என்று பாசமழை பொழிந்து வருகின்றனர்.

இப்படி அனைவரையும் கவர்ந்த உதயநிதி ஸ்டாலினை பார்த்தே ஆக வேண்டும் என்று கூறி சென்னையில் பெண் ஒரு ரணகளம் செய்துவிட்டார். அந்த பெண்ணின் பெயர் ரெஜிலா. அவரது கணவர் பெயர் ராஜேஷ். பெயரின் ஆங்கில முதல் எழுத்து ஒன்றாக இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை.

கணவரை பிரிந்து வாழ்ந்து கன்னியாகுமரியில் வசித்து வந்த அவர் சென்னை வந்தார். நேராக திருவேற்காடு சென்ற கணவரிடம் தமது நகைகளையும், பணத்தையும் தருமாறு கேட்டிருக்கிறார். கணவருக்கும், ரெஜிலாவுக்கும் பயங்கர சண்டை. கோபத்தில் அங்கிருந்து வெளியேறிய ரெஜிலா நேராக பூந்தமல்லி மகளிர் போலீசுக்கு போயிருக்கிறார். அங்கே இவரது புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

உடனே என்ன நினைத்தாரோ தெரியவில்லை… நேராக ஸ்டேனுக்கு எதிரே இருந்த 200 அடி செல்போன் டவரில் ஏறி உச்சிக்கு போய்விட்டார். தற்கொலை செய்து கொள்வதாக அறிவித்து அதிர வைத்தார். உடனே அந்த இடமே பரபரப்பானது.

ஒரு கட்டத்தில் என்ன நினைத்தோரோ தெரியவில்லை… திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இப்போது இங்கு வந்தாக வேண்டும் என்று கூற ஆரம்பித்துவிட்டார். அவ்வளவு தான்… அரண்டு போன போலீஸ்… கையெடுத்து கும்பிட்டு மன்றாடியது. ஆனால் சமாதானம் ஆகாத ரெஜிலா பிடிவாதமாக உதயநிதி ஸ்டாலின் வந்தே ஆக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அப்போது அங்கே வந்த பூவை நகர திமுக செயலாளர் ரவிக்குமார், ரெஜினாவிடம் பேசினார். தம்மை உதயநிதி ஸ்டாலின் தான் அனுப்பி வைத்தார். உங்களிடம் அவர் செல்போனில் வீடியோ காலில் பேச ரெடியாக உள்ளார். கீழே வாங்க என்று கூறி இருக்கிறார். அதை கேட்டு சமாதானம் அடைந்த ரெஜிலா கீழே இறங்கி வர… அதன் பின்னரே போலீஸ் நிம்மதி ஆனது.

Most Popular