நெஞ்சுவலி…! ICUவில் ஈவிகேஎஸ் அட்மிட்..!
சென்னை: நெஞ்சுவலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 24ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் திருமகன் ஈவேரா தந்தை, ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இந் நிலையில் அவருத்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பற்றியோ, அவரது உடலுக்கு என்ன என்பது பற்றியோ குடும்பத்தினர் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.