Sunday, May 04 12:34 pm

Breaking News

Trending News :

no image

ஜெ. மரண அறிக்கை எப்போது ரிலீஸ்..! ஆறுமுகசாமி சஸ்பென்ஸ்


சென்னை: ஜெயலலிதா தலைமையிலான மரண அறிக்கையயை வெளியிடும் உரிமையை அரசு முடிவு செய்யும் என்று நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை ஆறுமுகசாமி ஆணையம் இன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. மொத்தம் 600 பக்கங்கள் கொண்டது இந்த அறிக்கை.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த அறிக்கை இருக்கிறது. முதல்வரிடம் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு வருடத்திலும் 149 சாட்சிகளை விசாரித்தோம். 500 பக்கங்களில் ஆங்கிலம், 608 பக்கங்களில் தமிழிலும், 3 பாகங்களாக அதன் சுருக்கத்தையும் தந்திருக்கிறோம்.

அறிக்கையை வெளியிடுவதா, வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்யும். மருத்துவர்கள் தரப்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஜெயலலிதாவின் வீட்டில் சென்று விசாரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அறிக்கையில் அவரது உடல்நலம், பழக்க வழக்கங்கள், யார் பார்த்துக் கொண்டார்கள் உள்ளிட்ட பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சாட்சியங்களின் விவரங்களை நான் அதிகம் கேர்த்துள்ளேன் என்று கூறினார்.

Most Popular